பொய்
நீ இல்லையெனில் நானில்லைகாதல் சொன்னது.
நீ இருக்கும்வரை உன்னோடு
நட்பு சொன்னது.
உன்னால்தான் நான்
உறவு சொன்னது.
உனக்குள்
உன்னுடன்
உன்னால்
எல்லாவற்றையும் தகர்த்தது
அவரவர் பசி.
........
தனிமை

"கவிதையெல்லாம் வேணாம்
அஜாக்ஸ் படிடா" - ஒரு நண்பன்.
"கஷ்டப்படாத மச்சி
தமிழ்லே பேசு" - இன்னொரு நண்பன்.
தட்டிக் கொடுக்க மட்டுமின்றி
தள்ளி வைக்கவும் ஆளில்லாது
தனிமையில் தவிக்கிறது மனசு
கேட்பாரற்று கிடக்கும்
பிளாட்பாரக் குழந்தையாய்
வெறுமனே பரிதாபத்தை மட்டும்
சம்பாதித்துக் கொண்டு.
........
"ச்சும்மா"
கட்டணக்கழிப்பிட வாசலில்
இலவசமாய் வானவில்
குழாயில் பீறிடும் தண்ணீர்.
2 comments:
//உனக்குள்
உன்னுடன்
உன்னால்
எல்லாவற்றையும் தகர்த்தது
அவரவர் பசி.//
நிஜம் தான் நண்பரே. நல்லா எழுதறீங்க. வாழ்த்துக்கள். தொடரவும்
- சகாரா.
//தட்டிக் கொடுக்க மட்டுமின்றி
தள்ளி வைக்கவும் ஆளில்லாது
தனிமையில் தவிக்கிறது மனசு
கேட்பாரற்று கிடக்கும்
பிளாட்பாரக் குழந்தையாய்//
மிகச்சிறந்த வரிகள்.கண்ணீரை வரவழைத்தன.
Post a Comment