Monday, December 31, 2007

புத்தாண்டு


பேச்சுக்கு பகுத்தறிவு பேசி
மோதிரம் பெற்று ஆசிவாங்கும்
நவீன பகுத்தறிவாதிகள்.

நிலம்,டிவி எல்லாமே இலவசம்
அரசின் திசைமாற்றம்.

டைட்டானியம்,அனல் மின்சாரம்,சிறப்பு பொருளாதாரம்
உண்மை என்னவென்று தெரியாது.

மக்களால்,மக்களுக்கு....நடக்கிறதா இங்கே?

இதுதான் புத்தாண்டிலும் தொடருமெனில்
புத்தாண்டே...
பொறுத்திருந்து அடுத்த ஆண்டு வா.

அதுவரை
"நாளை மற்றுமொரு நாளே"

Saturday, December 15, 2007

நட்பு?

தோழி..
உனக்கென்று கொடுத்தேன் "Saree Pin" ஒன்று
உன் சேலை ஓரம் சேதம் தவிர்க்க.

வாங்கிப் பார்த்து திருப்பித் தந்தாய் வேண்டாமென
வீட்டுக்காரனின் பெருமை கேட்கும்
விருந்தாளியின் பாவனையுடன்.

பின் வ‌ழியனுப்பி வைத்தாய்
உன் வ‌ழ‌க்க‌மான‌ மொழியில் ஒரு 'ஸாரி'டாவுட‌ன்.

வேதனைப்பட்டது அடிமனசு
அடிபட்டு கிழிந்த நகத்தை
அருகம்புல் கட்டி இழுப்பதன் வலியாக.

க‌ருக்கொண்ட‌ பூனையின் வ‌லியைக்கூட‌ப் புரிந்துகொண்டு
த‌ட‌விக்கொடுக்கிறாய் தாய‌ன்புட‌ன்.
ஏனடி புரியவில்லை என் வலி உனக்கு?

வலி மறுத்ததிலில்லை
மறுக்கப்பட்ட காரணத்தை மறைத்ததில்தான் என்று.

பேசுகையில், வாழ்த்துகையில், சண்டையிடுகையில் தோழியாய்
பிற பரிமாற்றல்களின்போது சராசரிப்பெண்ணாய்.
....
....
....

வார்த்தைகளில் மட்டும் வாழ்கிறது
நமக்கான நட்பு!




இடம்
கனவுகளில் கருக்கொண்டு
காதல் குழந்தையை பெற்றுத் தருகிறேன்
எதில் போடுவாய் அதை
தொட்டியிலா?
தொட்டிலிலா?
கடைக்கண் பார்வை
பின்தொடரச் சொல்லிவிட்டு முன்சென்றாய்
பின்வந்த என்னைப் பார்த்து சொல்கிறாய்
நான் துரத்தியதாகவும்
நீ தப்பி ஒடியதாகவும்.
நேசம்

நான் காதலோடு கொடுத்த கடிதங்கள் கிழிபட்டன
பருவங்களுக்கும் பண்டிகைகளுக்குமான
என் வாழ்த்து அட்டைகள் எரிக்கப்பட்டன
எய்தவனிருக்க அம்பையேன் நோகிறாய்?
என்னைக் கிழி அல்லது எரி
அப்பொழுதேனும் புரியும் உனக்கு
என் நேசம்.
ஸ்ப‌ரிச‌ம்

நீ பூப்ப‌றிக்க‌ச் சென்றால்
எல்லாவ‌ற்றையும் ப‌றித்துவிடு
இல்லையேல்
அவை வாடிவிடும்
உன் விர‌ல்க‌ள் ஸ்ப‌ரிசிக்காத‌ கார‌ண‌த்தால்.

Wednesday, November 21, 2007

THANKS

My Hearty thanks to SAHARA who helps me a lot to create and publish my blog.

Thanks SAHARA Thanks.

Monday, October 29, 2007

வாய்ப்புகள்
விளக்குகள் எரிந்த பொழுது இருந்த வெளிச்சத்தைவிட‌
அணைந்த‌ பொழுதில் தொலைந்த‌ வெளிச்சம்
ம‌ன‌தில் ப‌ர‌வுகிற‌து... பிர‌காச‌மாக‌
------------------------------------------------------------------------------------------------
தனிமை
என் தனிமை என்பது யாரும் இல்லாத பொழுதல்ல‌
நீ இல்லாத பொழுது.
------------------------------------------------------------------------------------------------
கலை
உன் நினைவுகளை மட்டும் முதலாக கொண்டு
நான் கற்ற கலை
கவிதை எழுதுவது.