அண்ணாந்து பார்த்தது நீகண் கூசியது சூரியனுக்கு.
.......
தன்னைத் தாக்கிய கல்லையே
மையப்புள்ளியாக்கி வட்டமிடும்
நீரின் அலைகளைப் போலத்தான்
உன் மீதான என் காதலும்.
.......
'உன்னப் பெத்ததுக்கு
உலக்கயப் பெத்துருக்கலாம்'
அடிக்கடி சொல்வாள் அம்மா.
ஆசைப்பட்டது அடிமனசு
நீ அரிசி குத்தும்போது.
.......
கல்லில் கீறினேன் உன் பெயரை
சிற்பமானது கல்.
1 comment:
//தன்னைத் தாக்கிய கல்லையே
மையப்புள்ளியாக்கி வட்டமிடும்
நீரின் அலைகளைப் போலத்தான்
உன் மீதான என் காதலும்.//
அடடா! காதல் இப்படி கூட சொல்லுமா?? :)
- சகாரா.
Post a Comment