Thursday, February 28, 2008

அஞ்சலி

என் ஆசான் பொறியாளர்,எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

Monday, February 18, 2008

தூண்டல்

யாருமில்லா த‌னிமை வேண்டி
ஊருக்கு ஒதுங்கிய‌ கோயிலுக்கு சென்றால்
ம‌ன‌க்குள‌த்தில் க‌ல்லெறிகின்ற‌ன
உடைந்த‌ வ‌ளைய‌ல் துண்டுக‌ளும்
காய்ந்த‌ பூச்ச‌ருகும்.


தேசம்

கையில் தட்டுடன்
மெய்யில் கந்தலுடன்
பையில் சில்லறையுடன்
சாலையோரத்தில் பிச்சைக்காரர்கள்.
சிலருக்கு பாரமுகமாய்
பலருக்கு பாராமுகமாய்
எனக்கோ பாரத‌முகமாய்...
-----------------------------------------