தான் காதலிக்க ஒரு பெண்
தன்னை காதலிக்க ஒரு பெண்
சிரித்துப் பேசி ஆர்ப்பரிக்க
தோழிகளாய் சில பெண்கள்
..... .....
அன்பாய்ப் பழகி
சிநேகமாய் இருக்கும் பெண்கள்
ஏனோ சினிமா காதாநாயகனுக்கு
மட்டுமே வாய்க்கின்றனர்।
Tuesday, May 13, 2008
Thursday, March 27, 2008
காதல் கண்கள்
வில்லாய் புருவம்
வேலாய் விழிகள்
மெல்லிடை
கார்கூந்தல்
அழகுக்கு என்னென்ன உவமைகள்
அத்தனையும் இருக்கும்.
பார்க்கும் எல்லோரும்
அழகாய்த்தான் தெரிகிறார்கள்.
ஆனால்
உன்னைவிட யாரும்
அழகியாய் தெரிவதில்லை.
வேலாய் விழிகள்
மெல்லிடை
கார்கூந்தல்
அழகுக்கு என்னென்ன உவமைகள்
அத்தனையும் இருக்கும்.
பார்க்கும் எல்லோரும்
அழகாய்த்தான் தெரிகிறார்கள்.
ஆனால்
உன்னைவிட யாரும்
அழகியாய் தெரிவதில்லை.
Friday, March 14, 2008
எல்லாம் உனக்காக
Thursday, February 28, 2008
Monday, February 18, 2008
Saturday, January 5, 2008
பொய்
நீ இல்லையெனில் நானில்லைகாதல் சொன்னது.
நீ இருக்கும்வரை உன்னோடு
நட்பு சொன்னது.
உன்னால்தான் நான்
உறவு சொன்னது.
உனக்குள்
உன்னுடன்
உன்னால்
எல்லாவற்றையும் தகர்த்தது
அவரவர் பசி.
........
தனிமை

"கவிதையெல்லாம் வேணாம்
அஜாக்ஸ் படிடா" - ஒரு நண்பன்.
"கஷ்டப்படாத மச்சி
தமிழ்லே பேசு" - இன்னொரு நண்பன்.
தட்டிக் கொடுக்க மட்டுமின்றி
தள்ளி வைக்கவும் ஆளில்லாது
தனிமையில் தவிக்கிறது மனசு
கேட்பாரற்று கிடக்கும்
பிளாட்பாரக் குழந்தையாய்
வெறுமனே பரிதாபத்தை மட்டும்
சம்பாதித்துக் கொண்டு.
........
"ச்சும்மா"
கட்டணக்கழிப்பிட வாசலில்
இலவசமாய் வானவில்
குழாயில் பீறிடும் தண்ணீர்.
Subscribe to:
Posts (Atom)

