Monday, October 29, 2007

வாய்ப்புகள்
விளக்குகள் எரிந்த பொழுது இருந்த வெளிச்சத்தைவிட‌
அணைந்த‌ பொழுதில் தொலைந்த‌ வெளிச்சம்
ம‌ன‌தில் ப‌ர‌வுகிற‌து... பிர‌காச‌மாக‌
------------------------------------------------------------------------------------------------
தனிமை
என் தனிமை என்பது யாரும் இல்லாத பொழுதல்ல‌
நீ இல்லாத பொழுது.
------------------------------------------------------------------------------------------------
கலை
உன் நினைவுகளை மட்டும் முதலாக கொண்டு
நான் கற்ற கலை
கவிதை எழுதுவது.

2 comments:

காஞ்சனை said...

//அணைந்த பொழுதில் தொலைந்த வெளிச்சம்
மனதில் பரவுகிறது...//

மிக அழகான வரிகள். மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர..


- சகாரா.

GunaSekaran said...

nice